அப்துல் கலாம் முஸ்லிம் இல்லையா? நபி வழியா பிர்அவ்ன் வழியா?

இருப்பவர்கள் பற்றிய கேள்விக்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள், வகையற்றவர்கள். தங்கள் இயலாமையை மறைக்க  இறந்தவர்களைப் பற்றி கேள்வி கேட்டு திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். பி.ஜே.பி.யால் யாகூப் மேமன் கொலை செய்யப்படுவதை  மறைக்க அப்துல் கலாம்  இறப்பு பயன்பட்டது.  அதே மாதிரி இன்ஷியல் உடையவருக்கு அப்துல் கலாம் உடைய மறுமை பயன்பட்டுள்ளது. 

இதனால்  பிக்பாஸ் வீட்டிலிருந்து மன்னிக்கவும், அண்ணன் வீட்டிலிருந்து அக்கா வீட்டுக்கு ஓடி விட்டவரைப் பற்றிய கேள்வி மறைந்து விட்டது. நினைத்த காரியம் நிறைவேறி விட்டது. சரி தலைப்புக்கு வருவோம். 

20:51 قَالَ فَمَا بَالُ الْقُرُوْنِ الْاُوْلٰى‏

"முன்னர் சென்றுபோன (சிலை வணக்கம் செய்து கொண்டிருந்த)வர்களின் கதி என்னாகும்?" என்று     (பிர்அவ்ன்)  கேட்டான்.

அதாவது இறந்து விட்டவர்களைப் பற்றி கேள்வி கேட்பது பிர்அவன்  வழி. பிர்அவன் வழி  நடப்பவர்கள் கேள்வி கேட்டால் நபி வழி நடப்பவர்கள் என்ன பதில் சொல்ல வேண்டும்? எப்படி சொல்ல வேண்டும்?

20:52 قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّىْ فِىْ كِتٰبٍ‌‌ۚ لَا يَضِلُّ رَبِّىْ وَلَا يَنْسَى

அதைப்பற்றிய ஞானம்- அறிவு- விபரம் என் இறைவனிடமிருக்கும் பதிவுப்புத்தகத்தில் இருக்கின்றது. அவன் (அவர்கள் செய்துகொண்டு இருந்ததில் யாதொன்றையும்) தவற விட்டு விடவும் மாட்டான்; மறந்து விடவும் மாட்டான்.

பிர்அவ்ன்களின் விருப்பத்திற்கு மாற்றமாக இப்படித்தான் நபி வழி நடப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும்.  பிர்அவ்ன்கள் விருப்பப்படி பதில் சொன்னால் அவனும் பிர்அவ்ன்தான். 

இது நமது பத்வா-தீர்ப்பு அல்ல.  அல்குர்ஆன் 20ஆவது அத்தியாயமான  சூரா தா ஹா வில் 51,52 ஆகிய வசனங்கள் மூலம் அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ள தீர்ப்பு ஆகும்.

பிர்அவ்ன் என்ன எதிர் பார்த்தான். மூஸா நபி(அலை) அவர்கள் இறந்து விட்டவர்களை முஸ்லிம்கள் இல்லை எனக் கூறுவார்  என்று எதிர் பார்த்தான். மூஸா நபி(அலை) அவர்கள்  பிர்அவ்ன்  எதிர் பார்த்தபடி பதில் சொல்லவில்லை. 


கீழே உள்ளது 04.08.2017 அன்று    மேலப்பாளையம்  மஸ்ஜிதுர்   ரய்யான்   தலைவர்   மவ்லவி ஏயன்னா   இப்றாஹீம்  மஹ்ழரி அவர்கள் அளித்த பதில். 

முஸ்லிமை முஸ்லிம் இல்லை என்று கூறலாமா? 

இந்தக் கேள்வி இப்பொழுது வைரலாகி உள்ளது இஸ்லாத்தின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.


وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْيَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِيْنَ‌ۘ‏

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஈமான் கொண்டோம் நம்பினோம்  என்று சொல்லக் கூடியவர்களும் மனிதர்களில் உள்ளனர். அவர்கள் ஈமான் கொண்டவர்கள் இல்லை. இது சூரத்துல் பகராவில் உள்ள 8 ஆவது வசனம் ஆகும். அதைத் தொடர்ந்து இந்த இரட்டை வேட மனிதர்களைப் பற்றி அடுத்தடுத்த உள்ள வசனங்களில் சொல்லப்பட்டு உள்ளது.


அவர்கள் அல்லாஹ்வையும் முஃமின்களையும் ஏமாற்ற நினைக்கின்றனர்
அவர்கள் உள்ளங்களில் நோய் இருக்கின்றது
அவர்கள் பொய்யர்கள். 
அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு
அவர்கள் குழப்பவாதிகள்
முஃமின்களை முட்டாள்கள் என்கிறார்கள்

இப்படி தொடராகவும் இன்னும் பல அத்தியாயங்களிலும் அல்லாஹ் அடையாளம் காட்டி உள்ளான். யாருக்கு அடையாளம் காட்டி உள்ளான்? அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அடையாளம் காட்டி உள்ளான்.


ஈமான் இல்லாத இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் துாதருடனும் ஈமான் கொண்ட முஸ்லிம்களுடனும் கலந்துதான் இருந்தார்கள். நபியின் பள்ளியான மஸ்ஜிதுன் நபவியில் வந்து தொழுதார்கள். போருக்கு கூட ரசூல்(ஸல்) அவர்களுடன் சென்றார்கள். ஈமான் இல்லாத இந்த இரட்டை வேடதாரிகளை இன்னவர்களெல்லாம் முஸ்லிம்கள் இல்லை என நபி(ஸல்) அவர்கள் அடையாளம் காட்டவில்லை

மேலும் 49ஆவது அத்தியாயம் 14 வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ள வரலாற்றைப் பாருங்கள்.

49:14 قَالَتِ الْاَعْرَابُ اٰمَنَّا‌ ؕ قُلْ لَّمْ تُؤْمِنُوْا وَلٰـكِنْ قُوْلُوْۤا اَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْاِيْمَانُ فِىْ قُلُوْبِكُمْ‌



ஈமான் கொண்டோம் என்று கிராமவாசிகள் சொல்கின்றனர். நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. ஈமான் உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. ஆகவே அஸ்லம்னா கட்டுப்பட்டவர்களாக ஆனோம் அதாவது முஸ்லிம்களாக ஆனோம் என்று சொல்லுங்கள் என்று (நபியே) அவர்களுக்கு கூறுவீராக என்று அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான்தங்களிடம் உள்ள குறைகளை மறைப்பதற்கும் மக்கள் மறப்பதற்கும் அரசியல்வாதிகள் தடாலடி சட்டம் போடுவதும், ஆன்மீகவாதிகள் தடாலடி பத்வாக்கள் கொடுப்பது நடைமுறையாக ஆகிவிட்டது. அல்லாஹ் நம்மைக் காப்பானாக ஆமீன்

http://mdfazlulilahi.blogspot.ae/2017/08/blog-post_18.html 



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.